TNPSC Thervupettagam

IUCN ஆனது 1840 புதிய உயிரினங்களை சிவப்புப் பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பிரிவில் சேர்ப்பு

December 14 , 2019 1811 days 612 0
  • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமானது (International Union for the Conservation of Nature - IUCN) அதன் புதுப்பிக்கப்பட்ட “அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களைக் கொண்ட சிவப்புப் பட்டியலில்” சுமார் 1,840 புதிய உயிரினங்களைச் சேர்த்துள்ளது.
  • அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களைக் கொண்ட சிவப்புப் பட்டியல் என்பது அழிந்து போகும் அபாயமுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பட்டியலாகும்.
  • இந்தக் குழுவானது தனது புதுப்பிக்கப்பட்ட சிவப்புப் பட்டியலை ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடந்த COP25 காலநிலை பேச்சுவார்த்தையின் போது வெளியிட்டது.
  • சமீபத்திய திருத்தமானது வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள 37% நன்னீர் மீன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்பதைக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்