IUCN அமைப்பின் பசுமை/பச்சை நிறப் பட்டியலில் நான்கு புதிய தளங்கள் சேர்க்கப் பட்டுள்ளன மற்றும் மூன்று மீண்டும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நான்கு தளங்கள் மேற்கு ஆசியாவினைச் சேர்ந்தவை.
அவையாவன,
ஷரான் இயற்கை காப்புப் பகுதி - சவுதி அரேபியா
சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்அஜிஸ் ராயல் இயற்கை காப்புப் பகுதி
ஜோர்டானின் அகபா கடல் சார் காப்புப் பகுதி மற்றும்
ஐக்கிய அரபு அமீரகத்தின் சர் பு நாயர் பாதுகாக்கப்பட்ட பகுதி.
IUCN அமைப்பின் பசுமைப் பட்டியல் என்பது பயனுள்ள, சமமான மற்றும் மிகவும் வெற்றிகரமான பாதுகாக்கப்பட்ட மற்றும் வளங்காக்கப்பட்டப் பகுதியை அடைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவியச் சான்றிதழ் வழங்கீட்டுத் திட்டமாகும்.