IUCN அமைப்பானது, 'Guidance on Other Effective Area-Based Conservation Measures - இடம்சார் அடிப்படையிலான இதர செயல்திறன் மிக்க நடவடிக்கை தளம் குறித்த வழிகாட்டுதல் (OECMs) என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த ஒரு அறிக்கை ஆனது, OECMs மூலம் நிலம், நீர் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது குறித்த முக்கியமான வழிகாட்டுதலை வழங்குகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தப் பகுதிகளில் 30% பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற 2022 ஆம் ஆண்டு குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர்ப்பெருக்கக் கட்டமைப்பின் (KMGBF) மூன்றாவது இலக்கினை அடைய இது உதவும்.
OECMs ஆனது, முறையான பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (PAs) அல்ல, ஆனால் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன.
இந்தியாவானத்து சுமார் 14 இடம்சார் அடிப்படையிலான இதரச் செயல்திறன் மிக்க நடவடிக்கைத் தளங்களைக் கொண்டுள்ளது.