TNPSC Thervupettagam

IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இமயமலை மருத்துவ தாவரங்கள்

December 16 , 2022 581 days 348 0
  • இமயமலையில் காணப்படும் மூன்று மருத்துவத் தாவர இனங்கள் ஆனது, சமீபத்திய மதிப்பீட்டைத் தொடர்ந்து IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • மீசோட்ரோபிஸ் பெல்லிடா 'மிக அருகி வரும் இனம்' என்றும், ஃபிரிடிலோரியா சிர்ஹோசா 'பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இனம்' என்றும், டேக்ட்டிலோர்ஹிசா ஹட்டாகிரியா 'அருகி வரும் இனம்' என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளன.
  • மீசோட்ரோபிஸ் பெல்லிடா இனமானது, பொதுவாக பட்வா என்று அழைக்கப் படுகிறது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிற இது ஒரு குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே பரவிக் காணப்படும் நிலையான ஒரு புதர் வகைத் தாவரமாகும்.
  • ஃபிரிடிலோரியா சிர்ஹோசா (இமாலய ஃபிரிடிலோரி) என்பது ஒரு நிரந்தரமாக பூக்கின்ற ஒரு வித்திலை மூலிகைத் தாவரமாகும்.
  • இந்த மதிப்பீட்டுக் காலத்தில் (22 முதல் 26 ஆண்டுகள்) அவற்றின் எண்ணிக்கையில் குறைந்தது 30% குறைந்துள்ளன.
  • IUCN அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 239 புதிய இனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இதில் 29 இனங்கள் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்