TNPSC Thervupettagam

IUCN அமைப்பின் முதல் உலகளாவிய மரங்கள் மதிப்பீடு

November 12 , 2024 10 days 98 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினங்களின் செந்நிறப் பட்டியலின் புதுப்பிப்பின் போது முதல் உலகளாவிய மரங்கள் மதிப்பீடு ஆனது வெளியிடப்பட்டது.
  • இதன் கண்டுபிடிப்புகள் ஆனது உயிரிப் பன்முகத்தன்மை உடன்படிக்கையின் 16வது பங்குதாரர்கள் (COP16) மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.
  • உலகில் உள்ள மர இனங்களில் சுமார் 38 சதவீதம் ஆனது தற்போது அழிவை எதிர் நோக்கி வருவதாக இந்த மதிப்பீடு கண்டறிந்துள்ளது.
  • பகுப்பாய்வு செய்யப்பட்ட 47,282 மரங்களில் குறைந்தது 16,425 மரங்கள் அழியும் ஒரு அபாயத்தில் உள்ளன.
  • உலகின் மிகவும் உயர்ந்த மரங்கள் பன்முகத்தன்மை கொண்ட தென் அமெரிக்காவில், மதிப்பிடப் பட்ட 13,668 இனங்களில் 3,356 மர இனங்கள் ஆபத்தில் உள்ளன.
  • IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தற்போது 166,061 இனங்கள் உள்ளன, அவற்றில் 46,337 அழியும் அபாயத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்