TNPSC Thervupettagam

IUCN சிவப்புப் பட்டியலின் அச்சுறுத்தல் நிலையிலுள்ள இனங்களில் புதிய பதிவு

December 15 , 2021 950 days 542 0
  • IUCN சிவப்புப் பட்டியலில் உள்ள அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையானது முதல்முறையாக 40,000 என்ற அளவினைக் கடந்துள்ளது.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலிலுள்ள அச்சுறுத்தல் நிலையிலுள்ள இனங்கள் குறித்த தகவல் புதுப்பிக்கப்பட்டதன் படி, ஈரநிலங்கள் அழிக்கப்படுவது உலகளவில் தட்டான்பூச்சிகளின் (தும்பி) எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
  • அவை இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளான சதுப்பு நிலங்கள், ஈரநிலங்கள் மற்றும் பரந்து விரிந்து ஓடும் ஆறுகள் போன்றவை பரவலாக அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.
  • உலகளவிலான நிலைத்தன்மையற்ற வேளாண்மை மற்றும் நகரமயமாக்கலின் விரிவாக்கத்தினாலேயே பெரும்பாலும் இந்த இழப்புகள் தூண்டப்படுகின்றன.
  • இப்பட்டியலில் தற்போதுள்ள 1,42,577 இனங்களில் 40,084 இனங்கள் அழிந்து வரும் ஒரு அபாயத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்