IUCN அமைப்பானது, சமீபத்தில் பல்வேறு பல்லி மற்றும் சில கள்ளிச் செடி வகைகளை பாதுகாப்பதற்காக தனது செந்நிறப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.
கிரான் கனரியா இராட்சத பல்லி (கலோட்டியா ஸ்டெஹ்லினி) குறைந்த அளவு பாதுகாப்பு நடவடிக்கைத் தேவைப்படும் இனம் என்பதில் இருந்து மிகவும் அருகி வரும் இனம் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளது.
கிரான் கனரியா அரணை – நீல வால் அரணை (சால்சிடெ செக்ஸ்லினேயேட்டஸ்) - குறைந்த அளவு பாதுகாப்பு நடவடிக்கைத் தேவைப்படும் இனம் அருகி வரும் இனம் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளது.
போர்னியன் யானை அருகி வரும் நிலையில் உள்ள இனம் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐபீரிய சிவிங்கிப் பூனை இனமானது அருகி வரும் இனம் என்ற நிலையில் இருந்து எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.
பெரிய இலை வகை மஹோகனி இனமானது, IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம் என்பதிலிருந்து அருகி வரும் இனம் என்ற ஒரு நிலைக்கு நகர்ந்துள்ளது.
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தற்போது 163,040 இனங்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றில் சுமார் 45,321 அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன என்பதோடு இது 160,000 இனங்களை மதிப்பிடுவதற்கான மதிப்பீட்டுக் கருவி இலக்கை விஞ்சி உள்ளது.