இந்த சிந்து சமவெளி நாகரிகம் ஆனது வெண்கலக் காலத்தில் (கி.மு. 3000-1500) இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,000 தளங்களில் பரவியிருந்தது.
ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்போலா ஆகிய அறிஞர்கள் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தனர்.
தமிழ் மொழியானது ப்ரோட்டோ-திராவிடத்தினைச் சேர்ந்ததாக (சார்பு திராவிடம்) கூறப்படுவதோடு கி.மு. 2600-1700 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு உரைகளின் மொழியாக இது அடையாளம் காணப்படுகிறது.
சமஸ்கிருதம் ஆனது 1500 மற்றும் 1300 BCE என்ற காலத்திற்கு இடையில் சிரியாவின் மிட்டானி பேரரசுடன் தொடர்புடைய சில பெயர்கள் மற்றும் சொற்களில் இணைக்கப் பட்ட புரோட்டோ-இந்தோ-ஆரியப் பிரிவினைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தோ-ஈரானிய மொழிகளின் முந்தைய வடிவங்கள் ஆனது, மத்திய ரஷ்யாவில் கி.மு. 2000 ஆம் ஆண்டில் பேசப்பட்ட ஃபின்னோ-உக்ரிக் போன்ற மொழிகளில் இருந்து வருவிக்கப் பட்ட சொற்களிலிருந்து மட்டுமே அறியப்பட்டது.
ஆனால் இவற்றின் முற்காலத் தடயங்கள் எதுவுமே தமிழ் மொழிக்கான மூல வேர்களை விட பழமையானவையாக இல்லை.