TNPSC Thervupettagam

IVC மற்றும் திராவிடம் இடையிலான தொடர்புகள்

October 8 , 2024 45 days 166 0
  • இந்த சிந்து சமவெளி நாகரிகம் ஆனது வெண்கலக் காலத்தில் (கி.மு. 3000-1500) இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2,000 தளங்களில் பரவியிருந்தது.
  • ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்போலா ஆகிய அறிஞர்கள் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழ் மொழிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தனர்.
  • தமிழ் மொழியானது ப்ரோட்டோ-திராவிடத்தினைச் சேர்ந்ததாக (சார்பு திராவிடம்) கூறப்படுவதோடு கி.மு. 2600-1700 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்களில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு உரைகளின் மொழியாக இது அடையாளம் காணப்படுகிறது.
  • சமஸ்கிருதம் ஆனது 1500 மற்றும் 1300 BCE என்ற காலத்திற்கு இடையில் சிரியாவின் மிட்டானி பேரரசுடன் தொடர்புடைய சில பெயர்கள் மற்றும் சொற்களில் இணைக்கப் பட்ட புரோட்டோ-இந்தோ-ஆரியப் பிரிவினைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
  • இந்தோ-ஈரானிய மொழிகளின் முந்தைய வடிவங்கள் ஆனது, மத்திய ரஷ்யாவில் கி.மு. 2000 ஆம் ஆண்டில் பேசப்பட்ட ஃபின்னோ-உக்ரிக் போன்ற மொழிகளில் இருந்து வருவிக்கப் பட்ட சொற்களிலிருந்து மட்டுமே அறியப்பட்டது.
  • ஆனால் இவற்றின் முற்காலத் தடயங்கள் எதுவுமே தமிழ் மொழிக்கான மூல வேர்களை விட பழமையானவையாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்