சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணையத்திலிருந்து (International Whaling Commission-IWC) விலகுவதாக ஜப்பானின் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இனி ஜப்பான் நாடானது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலம் உட்பட அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் வணிக ரீதியாக திமிங்கலங்களை வேட்டையாட முடியும்.
விலகலுக்கான காரணம்
திமிங்கலங்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய அமைப்பால் இந்த கடல் பாலூட்டிகளின் வணிக ரீதியான வேட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த 32 ஆண்டுகால தடையை விலக்குவது தொடர்பாக டோக்கியா அரசின் தலைமையிலான முன்மொழிதலை அந்த அமைப்பு நிராகரித்ததன் காரணமாக ஜப்பான் அதிலிருந்து விலகியுள்ளது.