TNPSC Thervupettagam

IWC-ல் இருந்து ஜப்பான் விலகல்

December 28 , 2018 2064 days 596 0
  • சர்வதேச திமிங்கல பாதுகாப்பு ஆணையத்திலிருந்து (International Whaling Commission-IWC) விலகுவதாக ஜப்பானின் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இனி ஜப்பான் நாடானது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலம் உட்பட அதனைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் வணிக ரீதியாக திமிங்கலங்களை வேட்டையாட முடியும்.
விலகலுக்கான காரணம்
  • திமிங்கலங்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய அமைப்பால் இந்த கடல் பாலூட்டிகளின் வணிக ரீதியான வேட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த 32 ஆண்டுகால தடையை விலக்குவது தொடர்பாக டோக்கியா அரசின் தலைமையிலான முன்மொழிதலை அந்த அமைப்பு நிராகரித்ததன் காரணமாக ஜப்பான் அதிலிருந்து விலகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்