TNPSC Thervupettagam
March 29 , 2018 2335 days 743 0
  • மலையாளத் திரைத்துறைக்கு வாழ்நாள் பங்களிப்பு அளித்தமைக்காக கேரள அரசின் உயரிய கவுரவ விருதானC. டேனியல் விருதிற்கு பாடலாசிரியரும் (Lyricist)   இயக்குநருமான ஸ்ரீகுமாரன் தம்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • ரூபாய் 5 லட்சம் மற்றும் சான்றிதழ் கொண்ட இந்த விருது கொல்லத்தில் நடைபெறும் கேரள மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் தம்பிரானுக்கு வழங்கப்படும்.
  • மலையாளத் திரைத்துறையில் காட்டுமல்லிகா எனும் திரைப்படம் மூலம் 1966-ல் ஸ்ரீகுமாரன் தம்பி அறிமுகமானார். இது வரை 1000க்கும் மேற்பட்ட இன்னிசைப் பாடல்களை இவர் எழுதியுள்ளார்.
  • இம்மாதத்தின் தொடக்கத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருதை வென்ற பயானகம் திரைப்படத்திற்கு இவர் பாடல்களை எழுதியுள்ளார். இதன் இசையமைப்பாளர் MK அர்ஜீனன் ஆவார்.
  • மேடை இசை மற்றும் நாடகப் பாடல்களுக்கு வாழ்நாள் பங்களிப்பிற்கான கேரள சங்கீத நாடக  அகாடமி விருதை ஸ்ரீகுமாரன் தம்பி 2015-ல் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்