அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) ஆனது J.C.போஸ் ஆராய்ச்சி நிதி அளிப்பு முன்னெடுப்பினைத் (JBG) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த வெளிப்புற நிதி வாய்ப்புகள் மூலம் மூத்த இந்திய அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு புதிய திட்டம் ஆகும்.
இது மிகவும் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அவர்களின் ஆராய்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ஆய்வில் உள்ள மூத்த இந்திய அறிவியலாளர்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட சிறந்தச் சாதனைப் பதிவைக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் ஆக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒரு இந்திய நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் மிகவும் குறைந்தபட்சம் ஒரு பேராசிரியர் நிலை பதவியையோ அல்லது அதற்கு சமமான பதவியையோ வகிக்க வேண்டும்.
இந்த முன்னெடுப்பானது ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர ஆராய்ச்சி நிதியை வழங்குகிறது.
கூடுதலாக இதனைச் செயல்படுத்தும் நிறுவனத்திற்கு சுமார் 1.0 லட்சம் ரூபாயானது வருடாந்திர செலவினத் தொகையாக வழங்கப்படும்.