தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒப்பந்தத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மற்றும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார பணியாளர்களின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தச் செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவானது மொத்த உயிரிழப்புகளில் 63% எனவும், 30 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களின் மத்தியில் தொற்றா நோய்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 23% எனவும் UNICEF தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார நலத்திட்டத்துடன் (2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கையெழுத்தான ODA கடன் திட்டம்) இணைந்து செயல்படும்.
இது தமிழகத்தில் தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்.