TNPSC Thervupettagam

"Jobs at Your Doorstep" அறிக்கை

November 27 , 2024 36 days 85 0
  • மத்திய அரசானது, இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய ‘Jobs at Your Doorstep: A Jobs Diagnostics for Young People - வீடு தேடி வேலைவாய்ப்புகள்: இளையோர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் கண்டறிதல்’ என்ற ஒரு தலைப்பிலான உலக வங்கி அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, திறன் இடைவெளி பகுப்பாய்வு ஆகும் என்ற நிலையில் இது பள்ளிகள் இருக்கும் மாவட்டங்களின் பள்ளித் தொழில் துறை சார்ந்தத் தேவைகளில் வழங்கப்படும் வர்த்தகங்களைச் சீரமைக்க முயற்சிக்கிறது.
  • இது மாநிலங்களுக்கான பயிற்சி - கற்றல் மற்றும் தேர்வு முடிவுகளை வலுப்படுத்துதல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் இராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் மிக கவனம் செலுத்துகிறது.
  • இது அடித்தட்டு முதல் மேல்மட்டம் வரையிலான திறன் மேம்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிப்பதோடு இது உள்ளூர்ச் சந்தை சார்ந்தப் பயிற்சியை வலியுறுத்துகிறது.
  • 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் 2025 ஆம் ஆண்டில், சுமார் 50% மாணவர்களும், மேலும் 2030 ஆம் ஆண்டில் சுமார் 100% மாணவர்களும் திறன் சார் கல்விக்கான அணுகலைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்