TNPSC Thervupettagam
December 6 , 2023 227 days 151 0
  • இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட சோதனை அடிப்படையிலான அணுக்கரு இணைவு உலை ஆகும்.
  • ஜப்பானின் இபராக்கி என்ற மாகாணத்தில் அமைந்துள்ள இந்த உலை அதன் செயல் பாடுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.
  • இது 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை சூடேற்றப்பட்ட ஒரு சுற்றிச் சுழலும் பிளாஸ்மாவைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இனிப்பு மாவுப் பண்டம் வடிவமான “டோகாமாக்” கலனைக் கொண்டுள்ளது.
  • இந்த அதிநவீன உலையானது பிரான்சு நாட்டில் உள்ள சர்வதேச அதிவெப்ப அணுக்கரு இணைவு சோதனை உலைக்கு (ITER) முன்னோடியாக உள்ளது.
  • அணுக்கரு இணைவு என்பது தூய்மையான மற்றும் நிலையான ஆற்றல் மூலமாகும்.
  • அணுக்கரு இணைவு என்பது தற்போது அணுக்கருப் பிளவு சார்ந்து இயங்கி வரும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றாக இருக்கும்.
  • இது இரண்டு அணுக்கருக்களை இணைத்து ஒற்றையான மற்றும் மிகவும் கனமான தனிமத்தை உருவாக்கச் செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.
  • அணுக்கருவைப் பிளவுபடுத்தும் அணுக்கருப் பிளவுச் செயல்முறை போலல்லாமல், இந்த அணுக்கரு இணைவு ஆனது குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்துடன் ஏராளமான ஆற்றலை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்