இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட சோதனை அடிப்படையிலான அணுக்கரு இணைவு உலை ஆகும்.
ஜப்பானின் இபராக்கி என்ற மாகாணத்தில் அமைந்துள்ள இந்த உலை அதன் செயல் பாடுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டது.
இது 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை சூடேற்றப்பட்ட ஒரு சுற்றிச் சுழலும் பிளாஸ்மாவைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இனிப்பு மாவுப் பண்டம் வடிவமான “டோகாமாக்” கலனைக் கொண்டுள்ளது.
இந்த அதிநவீன உலையானது பிரான்சு நாட்டில் உள்ள சர்வதேச அதிவெப்ப அணுக்கரு இணைவு சோதனை உலைக்கு (ITER) முன்னோடியாக உள்ளது.
அணுக்கரு இணைவு என்பது தூய்மையான மற்றும் நிலையான ஆற்றல் மூலமாகும்.
அணுக்கரு இணைவு என்பது தற்போது அணுக்கருப் பிளவு சார்ந்து இயங்கி வரும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றாக இருக்கும்.
இது இரண்டு அணுக்கருக்களை இணைத்து ஒற்றையான மற்றும் மிகவும் கனமான தனிமத்தை உருவாக்கச் செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.
அணுக்கருவைப் பிளவுபடுத்தும் அணுக்கருப் பிளவுச் செயல்முறை போலல்லாமல், இந்த அணுக்கரு இணைவு ஆனது குறைவான சுற்றுச்சூழல் தாக்கத்துடன் ஏராளமான ஆற்றலை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.