TNPSC Thervupettagam

Jupiter Icy Moon Explorer – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

May 18 , 2021 1197 days 523 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட Jupiter Icy Moon Explorer  என்ற விண்கலமானது சமீபத்தில் முக்கியமான தொடர் சோதனைகளில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளது.
  • இது JUICE (Jupiter Icy Moon Explorer) என அழைக்கப்படுகிறது.
  • இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கோள்களுக்கிடையே இயக்கப் படும் ஒரு விண்கலமாகும்.
  • இது இன்னும் அதன் கட்டுமானப் பணிநிலையில் தான் உள்ளது.
  • இத்திட்டத்திற்கான முதன்மையான ஒப்பந்ததாரர் நிறுவனம் ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் (Airbus Defence and Space) எனும் நிறுவனம் ஆகும்.
  • JUICE ஆய்வுக் கலமானது வியாழனின் மூன்று கலிலிய துணைக் கோள்களை ஆய்வுச் செய்யும்.
  • அவை யுரோப்பா, கனிமேடே மற்றும் கலிஸ்டோ (Europa, Ganymede and Callisto) ஆகியன ஆகும்.
  • இந்த மூன்று துணைக் கோள்களும் அவற்றின் மேற்பரப்புக்கு அடிப்பகுதியில் கணிசமான அளவில் நீரினைக் கொண்டுள்ளன.
  • இந்த விண்கலமானது 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் விண்ணில் ஏவப்படும்.
  • இது 2029 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வியாழனைச் சென்றடையும்.
  • இது ஐந்து விதமான ஈர்ப்புச் சக்திக் கருவியின் உதவியுடன் வியாழனைச் சென்று அடையும்.
  • ஈர்ப்புச் சக்தி உதவி என்பது மற்றொரு கோளின் () விண்வெளிப் பொருளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஒரு விண்கலத்தின் வேகத்தை அதிகரித்தல் () பாதையை மாற்றுதல் என்பதாகும்.
  • இது உந்துபொருளை (propellant) சேமிக்கவும் அதன் செலவினைக் குறைக்கவும் வேண்டி பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்