மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டி மீதான 75வது வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தென்கிழக்கு ஆசிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட சாரணர் மற்றும் வழிகாட்டிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சென்னையில் வசிக்கும் 91 வயதான K. அலமேலு அவர்கள், இந்த நிகழ்வில் முக்கிய நபராகப் பங்கேற்றார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 12 சாரணச் சிறுவர்களின் பேரணித் திரள்களிலும், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஏராளமான 'முகாம்களிலும்' அவர் கலந்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் இந்த இயக்கத்தின் வெள்ளி விழா, சென்னையில் நடைபெற்ற பொன் விழா மற்றும் திருச்சியில் நடைபெற்ற வைர விழா ஆகியவற்றில் அவர் கலந்து கொண்டார்.
பாரத சாரணர் மற்றும் வழிகாட்டு இயக்கத்தின் தேசியத் தலைமை ஆணையரான K.K. காந்தேல்வால் இந்த இயக்கத்திற்கான அன்பில் மகேசின் பெரும் பங்களிப்பிற்காக மதிப்புமிகு வெள்ளி யானை விருதினைஅவருக்கு அறிவித்தார்.
இந்த விருது ஜனாதிபதி திரௌபதி அவர்களால் வழங்கப்படும்.
சாரணர் இயக்கத்தின் நிறுவனர் ராபர்ட் பேடன் பவுல் அவர்களின் வம்சாவளியினரும் கில்வெல் என்பதின் ஐந்தாவது புரவலருமான டேவிட் பேடன் பவுல் என்பவரும் இந்த நிகழ்ச்சியில்கலந்துகொண்டார்
ஜாம்போரி குழுவானது தமிழ்நாடு ஆளுநர் RN ரவி அவர்களை சிறப்புத் தலைமைப் புரவலராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் MK ஸ்டாலினைத் தலைமைப் புரவலராகவும் மற்றும் ஜாம்போரி மன்றத்தின் புரவலராக துணை முதல்வரையும் கொண்டதாகும்.