TNPSC Thervupettagam

K2-18 b கோளில் மீத்தேன் மற்றும் Co2

October 23 , 2023 400 days 259 0
  • K2-18 b கோளில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற கார்பனைக் கொண்ட மூலக்கூறுகள் இருப்பதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் கிரகமானது பூமியை விட 2.6 மடங்கு அதிக ஆரத்தைக் கொண்டதாகவும் 8.6 மடங்கு நிறை கொண்டதாகவும் உள்ளது.
  • ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ள அதன் மேற்பரப்பானது கடல் நீரால் மூடப்பட்டு இருக்கலாம்.
  • K2-18 b கோளானது உயிர்கள் வாழத் தகுந்த (கோல்டிலாக்) மண்டலத்தில் உள்ள குளிர் மிக்க குள்ள நட்சத்திரமான K2-18 என்பதினைச் சுற்றி வருகிறது.
  • லியோ விண்மீன் தொகுப்பில் உள்ள கிரகமானது பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்