K2-18 b கோளில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற கார்பனைக் கொண்ட மூலக்கூறுகள் இருப்பதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கிரகமானது பூமியை விட 2.6 மடங்கு அதிக ஆரத்தைக் கொண்டதாகவும் 8.6 மடங்கு நிறை கொண்டதாகவும் உள்ளது.
ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ள அதன் மேற்பரப்பானது கடல் நீரால் மூடப்பட்டு இருக்கலாம்.
K2-18 b கோளானது உயிர்கள் வாழத் தகுந்த (கோல்டிலாக்) மண்டலத்தில் உள்ள குளிர் மிக்க குள்ள நட்சத்திரமான K2-18 என்பதினைச் சுற்றி வருகிறது.
லியோ விண்மீன் தொகுப்பில் உள்ள கிரகமானது பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது.