TNPSC Thervupettagam

KGF தங்கச் சுரங்கத்தினைப் புனரமைத்தல்

June 28 , 2024 179 days 259 0
  • கோலார் தங்க வயல்களில் (KGF) 1,003.4 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள 13 சுரங்கக் கழிவுகளைப் புனரமைப்பதற்காக ஏலம் விடுதல் மற்றும் மீண்டும் தங்கச் சுரங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான மத்திய அரசின் முன்மொழிதலுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • KGF பகுதியில் உள்ள 13 சுரங்கக் கழிவுகளில் 33 மில்லியன் டன் சுரங்கக் கழிவுகள் (பிரித்தெடுப்புக் கழிவுகள்) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒரு டன் கழிவினை செயல்முறைக்கு உட்படுத்தினால் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சுரங்கத் துறையின் கீழ் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட், KGF பகுதியில் அமைந்த அதன் அலுவலகத்துடன் 2001 ஆம் ஆண்டில் பொருளாதாரச் சாத்தியமின்மை காரணமாக மூடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்