தென் கொரிய ராணுவமானது "Kill Web" என்ற மிகவும் பயனுள்ள நடவடிக்கையினைப் பயன்படுத்த உள்ளது.
இவை ஏவப்படுவதற்கு முந்தைய நிலையிலேயே வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைகளின் அச்சுறுத்தல்களை அகற்றக் கூடியது.
இது இணையவழி நடவடிக்கைகள் மற்றும் மின்னணு சார்ந்த போர் போன்ற மேம்பட்ட போர் நுட்பங்களைப் பயன்படுத்தும் பல அடுக்கு அமைப்பு ஆகும்.
Kill Web என்பது தாக்குதல் நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்யும் வகையில் கள அலுவலர்கள் தங்கள் ஆரம்பக் கட்ட இலக்குத் தேர்வுகளை மாற்றியமைப்பதற்கு வழி வகுக்கிற வகையில் அமைந்த ஒரு நெகிழ்திறன் மிக்க உத்தி ஆகும்.
தற்போது, தென் கொரியா அதன் மூன்று மைய அமைப்பின் கீழ் Kill Chain என்ற செயல் முறையினைப் பயன்படுத்துகிறது.
Kill Chain என்ற செயல்முறையானது, Kill Web என்பதைப் போலல்லாமல் ஒற்றை தடத்தினைப் பயன்படுத்துவதோடு, குறைந்த நெகிழ்திறன் கொண்டதாகும்.