TNPSC Thervupettagam

Kindlins – இணைவு புரதங்கள்

August 10 , 2024 106 days 176 0
  • கிண்ட்லின்ஸ் என்பது முதுகெலும்பு உயரினங்களில் உள்ள அனைத்து வகையான உயிரணுக்களின் உயிரணு சவ்வுகளுடன் இணைக்கப்பட்ட செல்களுக்குள் காணப் படும் இணைவுப் புரதங்கள் ஆகும்.
  • பல சமிக்ஞை அனுப்பீட்டுப் பாதைகளுக்கான மையமாக இந்தப் புரதத்தினை இலக்காகக் கொண்ட சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு நோயின் பல அம்சங்களை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்யும் வகையிலான புதிய புற்றுநோய் சிகிச்சைகளை உருவாக்க வழிவகுக்கும்.
  • நிகோடின், புற ஊதா கதிர்கள் மற்றும் மேலும் இதர வகையிலான எண்ணற்ற இரசாயன மற்றும் நேரடி புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளின் தாக்கத்தின் கீழ் கிண்ட்லின்ஸ் புரதங்கள் பிறழ்வுகளுக்கு உட்படலாம்.
  • பிறழ்விற்கு உள்ளான கிண்ட்லின்ஸ் ஆனது, செல்களுக்குள் காணப்படும் பொதுப் பயன்பாட்டு இயக்கவிய சீர் நிலையைப் பேணும் ஒரு செயல்முறையை (ஹோமியோ ஸ்டாசிஸ்) சீர்குலைக்கும்.
  • எனவே, கிண்ட்லின்ஸ் புரதங்களில் ஏற்படும் மரபணு மாற்றங்களின் விளைவுகளைப் புரிந்து கொள்வது என்பது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மிகவும் சிக்கலான செயல்முறைகளைத் தொடங்கி விடுவதற்கான காரணிகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்