TNPSC Thervupettagam
July 27 , 2024 4 hrs 0 min 30 0
  • கேலோ இந்தியா திறமைகளை அடையாளம் காணல் (KIRTI) திட்டம் ஆனது இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று சண்டிகரில் தொடங்கப்பட்டது.
  • நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உலகளாவியப் பல்வேறு சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்தத் திறமைகளை அடையாளம் காணும் கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • KIRTI ஆனது விளையாட்டுகளை விளையாட விரும்பும் ஆனால் வழிகாட்டுதல் இல்லாத குழந்தைகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி நாட்டின் ஒவ்வொரு தொகுதியையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அடிமட்டத் திறமைகளை அடையாளம் காணும் செயல்முறையை ஒரே தளத்தில் நெறிப்படுத்த முயல்கிறது.
  • முதல் கட்டத்தில், 70 மையங்களில் மேற்கொள்ளப்பட்ட 3,62,683 பதிவுகளில், 51,000 மதிப்பீடுகள் ஆனது 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கொள்ளப் பட்டன.
  • 2036 ஆம் ஆண்டிற்குள் முன்னணி 10 விளையாட்டு நாடுகளில் ஒன்றாகவும், 2047 ஆம் ஆண்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெருவதற்குமான நாட்டின் இலக்குடன் இத்திட்டம் ஒன்றிணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்