நம்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல் படைக்காக கப்பல் எதிர்ப்புச் சீர்வேக எறிகணைகளை வாங்குவதற்காக இந்தியா ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது உள்நாட்டிலேயே மாறுபாடு செய்யப்பட்ட மாஸ்கோவின் கிலோ ரக நீர்மூழ்கிக் கப்பல் வகையான இந்தியக் கடற்படையின் சிந்துகோஷ் ரகமான டீசல் எரிபொருளில் இயங்கும் மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படும்.
Klub-S ரக எறிகணை என்பது ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படக் கூடிய 3M-54 காலிபர் ரக கப்பல் எதிர்ப்பு எறிகணைகளின் ஏற்றுமதிக்கான வடிவமாகும்.
இந்த வடிவமானது, எதிரி நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாட்டை நன்கு தவிர்க்கக் கூடிய அதன் மீயொலி வேகத் திறன்களுக்கு முக்கியத்துவம் பெற்றது.
ஒவ்வொரு எறிகணையும் சுமார் 10 முதல் 15 மீட்டர் (32 முதல் 49 அடி) உயரத்தில் கடற் படை மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளுக்கு எதிராக மிக அதிகபட்சமாக 300 கிலோ மீட்டர் (186 மைல்) தூரம் வரையில் இயங்கும் திறன் கொண்டவை என்பதால் இது நீண்ட தூர வரம்புடைய துல்லியத் தாக்குதல் திறன்களைக் கொண்டுள்ளது.