TNPSC Thervupettagam
February 25 , 2025 7 days 73 0
  • நியூட்ரினோ ஆராய்ச்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் ஆனது KM3NeT (கன கிலோ மீட்டர் நியூட்ரினோ தொலைநோக்கி) ஆனது ஒத்துழைப்பு மூலமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது ஆழ்கடல் ஆய்வகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச முயற்சியாகும்.
  • KM3NeT ஒத்துழைப்பு ஆனது, 21 நாடுகளில் உள்ள 68 நிறுவனங்களைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்ட நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
  • இந்தக் குழு மத்தியதரைக் கடலுக்கு அடியில் ஆழ்கடல் ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது.
  • நியூட்ரினோக்கள் மின்னூட்ட நடுநிலை கொண்ட மற்றும் மிகச் சிறிய நிறை கொண்ட அணுவின் சார்பு நிலைத் துகள்கள் ஆகும்.
  • இந்தக் குழு சமீபத்தில் KM3NeT திட்டத்தின் ARCA உணர்வி மூலம் மத்தியதரைக் கடலில் நியூட்ரினோக்கள் எனப்படும் பேய் துகள்கள் இருப்பதைப் பதிவு செய்துள்ளனர்.
  • இந்த வியத்தகு நியூட்ரினோவிற்கு KM3-230213A என பெயரிடப்பட்டுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் அதன் ஆற்றலை சுமார் 220 மில்லியன் பில்லியன் என மதிப்பிடச் செய்கின்றனர்.
  • KM3NeT ஆனது ARCA மற்றும் ORCA எனப்படும் இரண்டு உணர்விகளைக் கொண்டு உள்ளது.
  • ARCA ஆனது, சிசிலியின் போர்டோபலோ டி கபோ பாசெரோவிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் 11,319 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
  • ORCA ஆனது பிரான்சின் டூலோன் அருகே 8,038 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்