கோட்டின்ஜென் (ஜெர்மனி) நகரில் உள்ள சூரியக் குடும்ப ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளேன்க் மையம், சோன்பெர்க் ஆய்வு மையம், கோட்டின்ஜென் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் நாசா ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது.
இது KOI-465.04 என்று பெயரிடப் பட்டுள்ளது. இதன் பெருந்திரள் விண்மீன் கெப்ளர் – 160 என்று அழைக்கப் படுகின்றது.
மிகப்பெரிய வெளிக்கோளான KOI-465.04 பூமியிலிருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள தனது விண்மீனைச் சுற்றி வருகின்றது.
இது பூமியின் அளவைப் போன்று 2 மடங்கு அளவு குறைவானதாகும்.
இது ஒரு சுற்றை நிறைவு செய்ய 378 நாட்களை எடுத்துக் கொள்கின்றது.
கெப்ளர் 160 என்ற விண்மீன் ஆனது தனது சுற்றுவட்டப் பாதையில் குறைந்தது 3 கோள்களைக் கொண்டுள்ளது. மற்ற வெளிக்கோள் நட்சத்திரங்கள் வெளியிடாத கண்ணுக்குத் தெரியக் கூடிய ஒளியை இது உமிழ்கின்றது.
பெரும்பாலும் வெளிக்கோள் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகச்சிறியதாக உள்ளதனாலும் மங்கலான ஒளியைக் கொண்டுள்ளதன் காரணமாகவும் இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவை “சிவப்புக் குள்ளக் கோள்” நட்சத்திர வகைப்பாட்டைச் சேர்ந்த வகையில் இருந்து கொண்டு அகச் சிகப்புக் கதிர்களை உமிழ்கின்றன.