கேரள கல்வியியல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப (Kerala Infrastructure and Technology for Education - KITE) நிறுவனமானது KOOL எனும் திறந்த நிலை கற்றல் பயிற்சி தளத்தை வெளியிட்டு இருக்கின்றது.
இது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்குப் பயிற்சியளிக்க உதவும்.
KOOL ஆனது MOOC (மிகப்பெரிய திறந்தநிலை ஆன்லைன் படிப்புகள்) என்ற மாதிரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது கல்வியில் முழு அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலமாக கேரளாவை மாற்றுவதற்கு உதவும்.
கல்வித் துறையின் ஆதார தளமான Samagra என்ற தளத்தின் விரிவாக்கமாக இந்த KOOL தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்களது தகுதிகாண் பருவத்தினை நிறைவு செய்ய 45 மணி நேர கணினி படிப்பை வெற்றிகரமாக முடிப்பது கட்டாயமாக்கப்படும்.