கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ‘தனியுரிமை’ வழக்கின் முதன்மை மனுதாரருமான நீதிபதி K.S.புட்டசாமி அவர்கள் பெங்களுருவில் காலமானார்.
1986 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பிறகு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பெங்களூரு அமர்வின் முதல் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஆந்திரப் பிரதேசத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
2012 ஆம் ஆண்டில், அவரது 86வது வயதில், ஆதார் திட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்த முதல் நபர்களில் ஒருவராக நீதிபதி புட்டசாமி இருந்தார்.
இது 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது, நீதிபதி K.S. புட்டசாமி (ஓய்வு) மற்றும் இந்திய ஒன்றியத்திற்கு இடையிலான வழக்கில் தனியுரிமையினை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்து ஒரு மனதாக தீர்ப்பு வழங்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு வழிவகுத்தது.