மத்திய இணை அமைச்சர் L. முருகனை, தாவார்சந்த் கேஹ்லாட் ராஜினாமா செய்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியுள்ளது.
முருகன் ஜூலை மாதம் வரையில் தமிழக பா.ஜ.க பிரிவிற்குத் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள அமைச்சகத்தின் இணை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
இதுவே அவர் ஆறு மாதத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தருவித்தது.
கெஹ்லாட் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது.