L.69 மற்றும் C-10 குழுக்களின் கூட்டு அமைச்சர் கூட்டம்
October 3 , 2024 51 days 142 0
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 79வது அமர்வின் போது, உறுப்பினர் நாடுகளின் L.69 மற்றும் C-10 குழுக்களின் முதல் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
பத்து நாடுகளின் குழு (C10) என்பது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) ஒரு பகுதியாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் குழு ஆகும்.
இது கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக நன்கு மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
L69 குழுவில் ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் (வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகள்) 32 வளர்ந்து வரும் நாடுகள் (இந்தியா உட்பட) உள்ளன.
இது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் அந்தஸ்தின் விரிவாக்கத்தை இது குறிக்கிறது.
இது 2007-08 ஆம் ஆண்டில் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவண எண் "L.69" என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது.
இது அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை (IGN) செயல்முறையைத் தொடங்க வழி வகுத்தது.