TNPSC Thervupettagam

LAC தொடர்பான இந்தியா மற்றும் சீனா ஒப்பந்தம்

October 26 , 2024 28 days 55 0
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, "ரோந்து ஏற்பாடுகள்" மற்றும் மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) இராணுவ நிலைகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன.
  • 17 சுற்று செயல்பாட்டு நெறிமுறைக் கூட்டங்கள் மற்றும் சுமார் 21 சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விலக்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகியப் பகுதிகளில் உள்ள பழைய ரோந்துப் பகுதிகள் வரை இந்தியப் படைப் பிரிவுகள் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்க இந்தப் புதிய ஒப்பந்தம் உதவும்.
  • கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் (வெப்ப நீரரூற்று), பாங்காங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் நிலவி வந்த சர்ச்சைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளன.
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் 3,488 கிலோ மீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • அருணாச்சலப் பிரதேசம் உட்பட இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதிகளின் மீது சீனா உரிமை கோருகிறது.
  • சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் உள்ள 38,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலப் பரப்பு லடாக்கின் ஓர் அங்கம் என்று இந்தியா கோரி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்