இந்தியக் கடற்படையானது INLCU L53 எனும் தரையிறங்கு ஊர்தி பயன்பாட்டுக் கப்பலை (Landing Craft Utility) போர்ட் பிளேரில் உள்ள கடற்படை பிரிவில் இணைத்துக் கொண்டு உள்ளது.
INLCU L53 கப்பல் ஆனது இந்திய கடற்படைக்காக கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனத்தால் (Garden Reach Shipbuilders and Engineers -GRSE) வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வரும் எட்டு மார்க் IV LCU (Mark IV) கப்பல்களின் தொடரில் மூன்றாவது கப்பலாகும்.
மார்க் IV LCU வரிசையின் முதல் கப்பலானது 2016ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
INLCU L53 மார்க் IV கப்பலானது நீர்-நில ஈரிட (amphibious ship) பயன்பாட்டுக் கப்பலாகும். இது 830 டன்கள் எடையை தாங்கிச் செல்ல வல்லது. இது கடலில் 15 நாட்டிகல் மைல் வேகத்தில் பயணிக்க கூடியது.
ஒருங்கிணைந்த இணைப்பு அமைப்பு (Integrated Bridge System -IBS) மற்றும் ஒருங்கிணைந்த மேடை மேலாண்மை அமைப்பு (Integrated Platform Management System-IPMS) போன்ற நடப்புநிலை தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் நவீன அமைப்புகள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலானது அந்தமான் மற்றும் நிகோபர் கடற்படை பிரிவில் நிலை நிறுத்தப்படும்.