TNPSC Thervupettagam
November 19 , 2022 610 days 263 0
  • எகிப்தின் ஷரம் எல் ஷேக்கில் நடைபெற்ற 27வது உறுப்பு நாடுகளின் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியாவும் ஸ்வீடனும் இந்த உச்சி மாநாட்டை நடத்தின.
  • தொழில்துறை மாற்றத்திற்கான தலைமை எனப்படும் இந்த LeadIT முன்னெடுப்பானது, தொழில்துறையினைத் தணித்திட, குறைந்த கரிம மாற்றப் பாதை மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்த LeadIT முன்னெடுப்பானது, நியூயார்க்கில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பருவநிலை செயல்பாட்டிற்கான உச்சி மாநாட்டின் போது, உலகப் பொருளாதார மன்றத்தின் ஆதரவுடன் சுவீடன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பிரதமர்களால் வெளியிடப்பட்டது.
  • LeadIT முன்னெடுப்பில் தற்போதையக் கட்டமானது 2023ம் ஆண்டில் நிறைவடைய இருக்கின்றது.
  • மேலும் அடுத்த ஆண்டானது, இது வரையில் மேற்கொள்ளப்பட்டதற்கான திறன் மற்றும் சாதனைகளைப் பிரதிபலிக்கச் செய்வதற்கான ஒரு தருணமாகும்.
  • தற்சமயம், இந்தக் குழுமமானது, 16 நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்து டால்மியா சிமென்ட், மஹிந்திரா குழுமம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கின்றது.
  • இதன் செயலகமானது, சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தால் நிர்வகிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்