ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது ஆறாவது LEADS (வெவ்வேறு மாநிலங்களில் தளவாட சேவைகளின் எளிமைத்தன்மை - 2024) என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குத் தேவையான தளவாட சேவைகளின் செயல்திறன் குறியீடாகும்.
குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆனது 2024 ஆம் ஆண்டு தளவாடக் குறியீட்டுப் பட்டியலில் "சாதனை படைத்தவை" பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், கோவா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தப் பட்டியலில் "வேகமாக முன்னேறி வருபவை" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
"சாதனை படைத்தவை" என்ற பிரிவில் உள்ள மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சண்டிகர், ஹரியானா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியனவாகும்.
கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லடாக் ஆகியவை "முயற்சி செய்து வருபவை" பிரிவில் அடங்கும்.
2018 ஆம் ஆண்டு உலக வங்கியின் தளவாடச் செயல்திறன் குறியீட்டின் (LPI) மீதான அடிப்படையில் LEADS அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.