மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) ஆனது, LEAP AHEAD உச்சிமாநாட்டில் LEAP AHEAD எனும் முன்னெடுப்பினை தொடங்கியுள்ளது.
இது இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா (STPI) மற்றும் டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியின் தி இண்டஸ் ஆன்ட்ரபிரனர் (TiE) ஆகியவற்றின் ஒரு கூட்டு ஒத்துழைப்பின் மூலம் தொடங்கப்பட்டது.
மதிப்பிடுதல் நிலை, வளர்ச்சி நிலை, தயாரிப்பு பல்வகைப்படுத்தல் அல்லது புதிய புவியியல் இடங்களில் விரிவாக்கத் திட்டமிடல் ஆகியவற்றில் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களின் வெற்றியை ஆதரிப்பது மற்றும் விரைவுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1 கோடி ரூபாய் வரையிலான நிதியுதவி மற்றும் விரிவான மூன்று மாத வழி காட்டல் திட்டத்தினை வழங்குகிறது.