அமெரிக்காவில் LED விளக்குகளின் பயன்பாடு விரைவாக அதிகரிப்பதால், அது ஒளி மாசுபாடு அதிகரிக்கும் நெருக்கடி நிலைக்கு இட்டுச் செல்கிறது.
LED விளக்குகள் ஆற்றலைச் சேமிப்பதையும், செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும்.
பிராதானமாக விலை மலிவான மற்றும் பிரகாசமான LED விளக்குகளின் பயன்பாட்டு அதிகரிப்பின் காரணமாக இரவு நேர வானமானது ஒவ்வொரு ஆண்டும் 10% அளவு பிரகாசமாகி வருகிறது.
இந்த அதிகப்படியான செயற்கை ஒளியானது நட்சத்திரங்களை நமது கண்களுக்குச் சரியான முறையில் புலப்படாமல் செய்கிறது.
இது மனிதர்களில் தூக்க சுழற்சி முறையைச் சீர்குலைக்கச் செய்து, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பத்தோடு, பூச்சிகளின் எண்ணிக்கையைப் பாதிப்பதால் மில்லியன் கணக்கான பறவைகளின் மரணத்திற்கு இது வழி வகுக்கிறது.