தமிழ்நாடு மாநில அரசின் திட்டக்குழுவானது ‘குறைந்த உமிழ்வு மண்டலம் (LEZ) – சென்னைக்கான ஒரு செயற்கருவித் தொகுப்பு’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இது மிகவும் விரைவுபடுத்தப்பட்ட பருவநிலை மாற்றங்களுக்கான ஐக்கியப் பேரரசு கூட்டாண்மை (UK PACT) திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள பிரித்தானிய துணை உயர் ஆணையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
LEZ என்பது வாகன உமிழ்வுத் தரநிலைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்காத வாகனங்களுக்கு அபராதக் கட்டணம் விதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிக மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியாகும்.
பொது சுகாதாரத்தை நன்கு மேம்படுத்துவதற்கும் சட்ட வரம்பு மதிப்புகளுக்கு அவை இணங்குவதற்கும் சுற்றுப்புற மாசுச் செறிவுகளைக் குறைப்பதே இந்த மண்டலத்தின் முதன்மை நோக்கமாகும்.
சென்னை மாநகரானது சுமார் 9 மில்லியன் மக்கள் தொகையுடன் இந்திய நாட்டின் நான்காவது பெரிய நகரமாக உள்ளது.
இந்த நகரம் ஆனது சில புறநகரப் பகுதிகளில் வருடாந்திர மக்கள் தொகை சுமார் 50% அதிகரிப்புடன் வேகமாக விரிவடைந்து வருகிறது.