ஈராக் நாட்டுப் பாராளுமன்றம் ஆனது தன் பாலின உறவுகளை 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையிலான குற்றவியல் நடவடிக்கையாக அறிவிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
1988 ஆம் ஆண்டு விபச்சாரத்திற்கு எதிரான சட்டத்தில் மேற்கொள்ளப்படும் சில திருத்தங்களின் கீழ் திருநர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் படும்.
முந்தைய சட்ட வரைவு ஆனது தன்பாலின உறவுகளுக்கு மரணத் தண்டனையை அதற்கான தண்டனையாக முன்மொழிந்தது.
புதிய சட்டத் திருத்தங்கள் தன்பாலின உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்கிறது.
தன்பாலின உறவுகளை "ஊக்குவிப்பதற்கு" குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.