TNPSC Thervupettagam
April 6 , 2021 1239 days 835 0
  • ஸ்விட்சர்லாந்திலுள்ள லார்ஜ் ஹாட்ரன் கொலைடரில் (Large Hadron Collider – LHC)  உள்ள இயற்பியலாளர்கள் இயற்கையின் ஒரு புதிய விசையைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • LHC என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் அணுத்துகள்களை அதிவேகத்தில் முடுக்கி விடும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஆய்வுக் கூடமாகும்.
  • இது ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மன்றத்தின் (CERN – European Council for Nuclear Research’s) வளாகத்தில் அமைந்துள்ளது.
  • இது 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று  முதன்முதலில் ஆரம்பிக்கப் பட்டது.
  • இது அணுத் துகள்களை அதன் பாதையின் ஊடாக அதன் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு வேண்டி அவற்றை முடுக்கி விடுவதற்கா27 கி.மீ. தொலைவிற்கு மீக்கடத்தி காந்த வளையங்களுடன் கூடிய ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது புரோட்டான் – புரோட்டான் என்ற ஒரு மோதலை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த முடுக்கிகளின் உள்ளே, அவற்றை மோதச் செய்வதற்கு முன்னால் ஒளியின் வேகத்திற்கு இணையான இரு உயர் ஆற்றல் துகள் ஒளிக்கற்றைகள் செல்லும்.
  • அதி உயர் வெற்றிடத்தில் வைக்கப்பட்ட இரு தனித்தனி ஒளிக்கற்றைக் குழாய்களின் ஊடாக இந்த ஒளிக்கற்றைகள் எதிரெதிர் திசையில் பயணிக்கும்.
  • மீக்கடத்தி மின்காந்தங்கள் வழி நடத்தும் வலுவான காந்தப் புலத்தினால் இவை முடுக்கி வளையங்களைச் சுற்றி இயக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்