சந்திரயான்-3 விண்கலத்தின் உலாவி கலத்தில் உள்ள LIBS என்ற கருவியானது, தென் துருவத்திற்கு அருகிலுள்ளப் பகுதியில் நிலவின் மேற்பரப்பின் தனிம கலவை குறித்து ஆய்வு செய்வதற்காக அதன் முதலாவது இடம் சார்ந்த மதிப்பீடுகளை மேற் கொண்டு உள்ளது.
LIBS என்பது ‘லேசர் கற்றைகளால் தூண்டப்பட்ட ஒளிப் பிரிகை நிறமாலைமானி’ என்பதைக் குறிக்கிறது.
இந்த இடம் சார்ந்த மதிப்பீடுகள் அந்தப் பகுதியில் கந்தகம் (S) இருப்பதை உறுதிப் படுத்துகின்றன.
அங்கு ஹைட்ரஜன் (H) உள்ளதா என தேடும் பணி நடந்து வருகிறது.
LIBS கருவியில் பொருத்தப்பட்டச் சாதனங்களானது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் மின்-ஒளியிழை அமைப்புகளுக்கான ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.