வானியலாளர்கள், LID-568 எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகவும் பெரிய கருந்துளையைக் கண்டறிந்துள்ளனர்.
அதன் காலம் ஆனது, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட, பேரண்டத்தின் இயக்கத்தினைத் தொடக்கிய பெரு வெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கலாம் என்று குறிக்கப்படுகிறது.
LID-568 ஆனது சூரியனை விட சுமார் 10 மில்லியன் மடங்கு அதிகமான நிறை கொண்டது என்பதால் சாகிட்டாரியஸ் A* என்ற கருந்துளையினை விட 2-1/2 மடங்கு அளவுடன் இருக்கலாம்.
LID-568 ஆனது, கோட்பாட்டு எடிங்டன் வரம்பை விட 40 மடங்கு அதிகமான வேகத்தில் பொருட்களை விழுங்குவதன் மூலம் பெரிதாகிறது.
இந்த வேகம் என்பது மிகப்பெரிய கருந்துளைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கிறது.
எடிங்டன் வரம்பு என்பது கருந்துளைகள் அடையக் கூடிய அதிகபட்ச ஒளிர்வு மற்றும் பொருளை உறிஞ்சும் வேகத்தைக் குறிக்கிறது.
LID-568 கொண்டிருப்பது போல இந்த வரம்பு மீறிய வேகமானது, மிக அதிக எடிங்டன் வரம்பிலான குவிதல் எனப்படும் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது.