TNPSC Thervupettagam
November 10 , 2024 19 days 90 0
  • வானியலாளர்கள், LID-568 எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகவும் பெரிய கருந்துளையைக் கண்டறிந்துள்ளனர்.
  • அதன் காலம் ஆனது, 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட, பேரண்டத்தின் இயக்கத்தினைத் தொடக்கிய பெரு வெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கலாம் என்று குறிக்கப்படுகிறது.
  • LID-568 ஆனது சூரியனை விட சுமார் 10 மில்லியன் மடங்கு அதிகமான நிறை கொண்டது என்பதால் சாகிட்டாரியஸ் A* என்ற கருந்துளையினை விட 2-1/2 மடங்கு அளவுடன் இருக்கலாம்.
  • LID-568 ஆனது, கோட்பாட்டு எடிங்டன் வரம்பை விட 40 மடங்கு அதிகமான வேகத்தில் பொருட்களை விழுங்குவதன் மூலம் பெரிதாகிறது.
  • இந்த வேகம் என்பது மிகப்பெரிய கருந்துளைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தற்போதைய கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கிறது.
  • எடிங்டன் வரம்பு என்பது கருந்துளைகள் அடையக் கூடிய அதிகபட்ச ஒளிர்வு மற்றும் பொருளை உறிஞ்சும் வேகத்தைக் குறிக்கிறது.
  • LID-568 கொண்டிருப்பது போல இந்த வரம்பு மீறிய வேகமானது, மிக அதிக எடிங்டன் வரம்பிலான குவிதல் எனப்படும் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்