LID-568 கருந்துளை கண்டுபிடிப்பு
February 4 , 2025
19 days
77
- நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மற்றும் சந்திரா ஊடுகதிர் ஆய்வகம் ஒரு வினோதமான கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளன.
- புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைக்கு LID-568 என பெயரிடப்பட்டுள்ளது.
- இது பெருவெடிப்பிற்கு 1.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இருந்த ஒரு குறைந்த நிறை கொண்ட மாபெரும் கருந்துளையாகும்.
- இந்தக் கருந்துளையானது, சுற்றியுள்ள பொருட்களின் திரளில் எடிங்டன் வரம்பை விட 40 மடங்கு அதிகமாக உள்ளிழுக்கிறது.
- ஒரு கருந்துளையானது ஒரு பொருளை உள்ளிழுக்கும் விகிதமானது வானியல் ஆய்வாளர்களால் எடிங்டன் வரம்பு என்று அழைக்கப்படும் வரம்பு மூலம் விவரிக்கப் படுகிறது.

Post Views:
77