மதுரையின் அரசு இராஜாஜி மருத்துவமனையானது LifeSigns எனப்படும் கம்பியில்லா நோயாளிக் கண்காணிப்பு உயிரி உணர்வியை உருவாக்கியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட வேண்டிய மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தக் கருவியானது உடலில் இணைக்கப்பட்ட ஒரு சில்லினை (Chip) போன்றது.
இக்கருவி வெப்பநிலை, நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்சிஜன் செறிவு நிலை மற்றும் ECG அசைவு போன்ற முக்கிய அளவீடுகளை ஒரு மருத்துவ ஊழியரின் உதவியின்றி பதிவு செய்கிறது.