இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல் காரணமாக புவி ஈர்ப்பு அலைகளை LIGO (லேசர் ஒளியலை அளவுமானி புவி ஈர்ப்பு அலை ஆய்வகம் - Laser Inferometer Gravitational-wave Observatory) கண்டறிந்துள்ளது.
புவி ஈர்ப்பு அலைகள் கண்டறியப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒரு சூப்பர்நோவா எனப்படும் உமிழும் வெடிப்பின் போது மறைந்து போன மாபெரும் நட்சத்திரங்களின் மீதங்களாகும்.
இவை சூரியனை விட 1.4 மடங்கு அதிக நிறை கொண்டவையாகும்.
நியூட்ரான் நட்சத்திரங்கள் பூமியிலிருந்து 520 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.
LIGO
இது அண்ட ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் சோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒரு மிகப்பெரிய ஆய்வகமாகச் செயல்படுகின்றது.
தற்போது LIGO ஆனது அமெரிக்காவின் லிவிங்ஸ்டன், லூசியானா மற்றும் ஹான்போர்டில் மூன்று ஈர்ப்பு அலை கண்டுபிடிப்பு ஆய்வகங்களை இயக்குகின்றது.
LIGO இந்தியா ஆய்வகமானது ஆனது மகாராஷ்டிராவில் அமைய இருக்கின்றது.
LIGO - இந்தியா என்ற திட்டத்தை இந்திய அணுசக்தித் துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.