TNPSC Thervupettagam

LIGO - இரண்டாவது ஈர்ப்பு அலை

January 11 , 2020 1654 days 1415 0
  • இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல் காரணமாக புவி ஈர்ப்பு அலைகளை LIGO (லேசர் ஒளியலை அளவுமானி புவி ஈர்ப்பு அலை ஆய்வகம் - Laser Inferometer Gravitational-wave Observatory) கண்டறிந்துள்ளது.
  • புவி ஈர்ப்பு அலைகள் கண்டறியப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒரு சூப்பர்நோவா எனப்படும் உமிழும் வெடிப்பின் போது மறைந்து போன மாபெரும் நட்சத்திரங்களின் மீதங்களாகும்.
  • இவை சூரியனை விட 1.4 மடங்கு அதிக நிறை கொண்டவையாகும்.
  • நியூட்ரான் நட்சத்திரங்கள் பூமியிலிருந்து 520 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

LIGO

  • இது அண்ட ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் சோதனைகளை மேற்கொள்வதற்கும் ஒரு மிகப்பெரிய ஆய்வகமாகச் செயல்படுகின்றது.
  • தற்போது LIGO ஆனது அமெரிக்காவின் லிவிங்ஸ்டன், லூசியானா மற்றும் ஹான்போர்டில் மூன்று ஈர்ப்பு அலை கண்டுபிடிப்பு ஆய்வகங்களை இயக்குகின்றது.
  • LIGO இந்தியா ஆய்வகமானது ஆனது மகாராஷ்டிராவில் அமைய இருக்கின்றது.
  • LIGO - இந்தியா என்ற திட்டத்தை இந்திய அணுசக்தித் துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்