5 நாட்கள் நடைபெறக் கூடிய லங்காவி கடல்சார் வான்வெளிக் கண்காட்சியானது (Langkawi International Maritime Aero Expo - LIMA-2019) மலேசியாவில் தொடங்கியது.
இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்காக இந்திய விமானப் படையானது முதன்முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கு கொள்கிறது.
LIMA 2019-இல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தைவிட மிக வேகமாக செல்லக்கூடிய) போர் விமானங்களான தேஜஸ் மற்றும் நீர்மூழ்கிப் போர்க் கப்பலான வழித்துணை INS கத்மாட் ஆகியவை இந்தியாவின் சார்பாக பங்கு கொள்கின்றன.