தென் கொரியாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவானது, அறை வெப்பநிலையில் மீமின்கடத்தியாக செயல்படக் கூடிய ஒரு சாதனத்தை (LK-99) உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
ஒரு மீக்கடத்தி என்பது மின்தடை இல்லாத ஒரு நிலையான மீக்கடத்தி நிலையை அடையும் ஒரு சாதனம் ஆகும்.
ஒரு மீமின்கடத்தியில், மின்னோட்டம் ஆனது காலவரையின்றி நீடிக்கும்.
வழக்கமான கடத்திகளில், மின்தடையானது படிப்படியாக குறைகிறது.
ஆனால் மீமின்கடத்திகளின் மின்தடையானது, மாறுநிலை வெப்பநிலையான ஒரு நிலையான வெப்பநிலைக்கு கீழே சுழிய நிலைக்கும் கீழே குறைகிறது.
இந்த வெப்பநிலையில், ஒரு மீமின்கடத்தியானது எந்தவித மின்தடையும் இல்லாமல் மின்சாரத்தைக் கடத்த முடியும்.
எந்தவித மின்தடையுமில்லாத நிலையில், ஒரு பொருள் மாறுநிலை வெப்பநிலையை (Tc) அடையும் போது வெப்பம், ஒலி அல்லது பிற ஆற்றல் வடிவங்கள் போன்ற எதையும் வெளியேற்றாது.